Skip to main content <%-- Protanopia filter --%> <%-- Deuteranopia filter --%> <%-- Tritanopia filter --%>

மிதிவண்டிப் பாதைகள்

 

மிதிவண்டிப் பாதை என்பது எரிபொருளற்ற இருசக்கர வாகனங்களுக்கான பிரத்தியேகப் பாதை. நகரின் பிரதான சாலைகளில் மிதிவண்டிகள் பயன்படுத்துவோரின் வசதிக்காகவென்றே வடிவமைக்கப்பட்ட பாதை. சென்னை நகர மக்கள் தாங்கள் செல்ல வேண்டிய அருகாமையிலுள்ள இடங்களுக்கு மிதிவண்டியில் செல்வதையோ நடந்து செல்வதையோ பெருநகர சென்னை மாநகராட்சி ஊக்குவிப்பதில் பெருமையடைகிறது. இதனை முன்னிலைப் படுத்தும் விதமாக, நகரின் பல்வேறு சாலைகளில் மிதிவண்டித் தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உடல்நலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போன்றவை மிதிவண்டி பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள். மிதிவண்டியில் பயணம் செய்வதன் மூலம் சாலை நெரிசலைத் தவிர்க்கலாம்.

மிதிவண்டிப் பாதைகள் வீடியோ

பசுமை வழி, நவீன உலகுடன் இணைந்து பயணிக்கும் வழி!


சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். ஒரு நாளுக்கு 10 கி.மீ. மிதிவண்டியில் பயணிப்பதன் மூலம் வருடத்திற்கு 1500 கிலோ அளவிற்கு எரிபொருள் நச்சு வாயு உமிழ்வைத் தவிர்க்கலாம். தவிர, சாலைப் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நேரங்களில் மிதிவண்டி பயன்படுத்துவதன் மூலம் சாலை நெரிசலைத் தவிர்க்கவும் நச்சு வாயு உமிழ்வை இயன்ற அளவு குறைக்கவும் நமக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

மிதிவண்டிப் பாதையில் பயணம் செய்வதால் விளையும் நன்மைகள்:

நச்சு வாயு உமிழ்வு பெருமளவில் குறைகிறது

நச்சு வாயு உமிழ்வு பெருமளவில் குறைகிறது

சுற்றுசூழலில் வளமான மாற்றம் உருவாகிறது

சுற்றுசூழலில் வளமான மாற்றம் உருவாகிறது

காற்றில் மாசு பரவுவதைத் தடுக்கிறது

காற்றில் மாசு பரவுவதைத் தடுக்கிறது

அதிக ஒலியினால் ஏற்படும் இடர்களைத் தவிர்க்கலாம்

அதிக ஒலியினால் ஏற்படும் இடர்களைத் தவிர்க்கலாம்

மிதிவண்டி தடம் – முன்னேற்றத்துக்கான பாதை

உடல்நலம் சார்ந்த பயன்கள்

உடல்நலம் சார்ந்த பயன்கள்

தொடர்ந்து மிதிவண்டி பயன்படுத்துவோருக்கு உடல்நலம் சீராய் இருப்பது மட்டுமன்றி உடல் வலிமையும் மனம் சார்ந்த ஆற்றலும் வெகுவாய் அதிகரிக்கிறது

சுற்றுசூழல் வளம் பெற்றுத் திகழும் நிலை

சுற்றுசூழல் வளம் பெற்றுத் திகழும் நிலை

எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாய்க் குறையும்

சாதுரியமான பயண முறை

சாதுரியமான பயண முறை

மிதிவண்டியில் அதற்கான தடத்தில் பயணிப்பதால் எரிபொருளுக்கான செலவு, சாலை நெரிசல் போன்றவற்றைத் தவிர்க்கலாம். நேரத்தையும் சேமிக்கலாம்.

பாதுகாப்பே பிரதானம்

பாதுகாப்பே பிரதானம்

மிதிவண்டித் தடத்தில் பயணிப்பது மிதிவண்டி பயன்படுத்துவோர் மட்டுமன்றி, பாதசாரிகள், மற்றும் ஏனைய வாகனங்களை பயன்படுத்துவோருக்கும் பாதுகாப்பாய் விளங்குகிறது

நிகழ்வு ஆய்வு

WUHAN

The capital city of Hubei Province of China has about 70000 cycles in a multi-vendor Cycle Share System...

COPENHAGEN

Also called the cycling capital of the world. Copenhagen plans to increase its cycling mode share from 37 to 50% in the next 3 years