Skip to main content <%-- Protanopia filter --%> <%-- Deuteranopia filter --%> <%-- Tritanopia filter --%>

ஆதாரநிலை அம்சங்களுக்கான பகுப்பாய்வு

  • சமூக ஆதாரநிலை அம்சம் 25% முக்கியத்துவம் மற்றும் 4 பிரிவுகள் கொண்டது. அவை: அடையாளம் & கலாச்சாரம், கல்வி, உடல்நலம் மற்றும் பாதுகாப்பு
  • சராசரி தரவரிசையில் முன்னிலை வகிக்கும் 5 நகரங்களையும் இப்பிரிவுகளில் ஒப்பிடுகையில் மிகப்பெரிய இடைவெளி அடையாளம் & கலாச்சார நிலையில் நிலவுகிறது. ஏனைய 3 பிரிவுகளில் சிறிய இடைவெளிகள் நிலவுகின்றன
  • விழுக்காடுகள் அடிப்படையில் அடையாளம் & கலாச்சார நிலையில் 35% இடைவெளியும், கல்வி நிலையில் 13% இடைவெளியும், உடல்நலம் நிலையில் 15% இடைவெளியும் பாதுகாப்பு நிலையில் 11% இடைவெளியும் நிலவுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
  • அடையாளம் & கலாச்சாரம் தொடர்பான கணிப்புகளில் வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த கட்டிடங்களை சீரமைப்பதற்காகவும், சுற்றுசூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைப் பாதுகாக்கவும், ஹோட்டல் தங்கு வசதிகளை மேம்படுத்தவும், கலாச்சார/விளையாட்டு நிகழ்வுகள் நடத்தவும் அதற்கான நிதி ஒதுக்கீடு விவரங்கள் பெறவும் திட்டக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டன.

 

Pillar Score

 

 

Pillar Score

 

  • திட சாதனங்களுக்கான ஆதாரநிலையின் முக்கியத்துவம் 45% ஆகவும் 9 பிரிவுகளைக் கொண்டதாகவும் உள்ளது.
  • திட சாதனங்களுக்கான ஆதாரநிலையின் 9 வேறுபாடுகளில், முன்னிலை வகிக்கும் 5 நகரங்களில் குறியீட்டு நிலையில் 3வது இடம் பெற்று மற்றவைகளில் 6 இடங்கள் பின்தங்கியுள்ளது.
  • மாசுக்கட்டுப்பாடு மற்றும் தரிசு நிலங்கள் பயன்பாடு ஆகிய அம்சங்களில் சராசரியாக முன்னிலை வகிக்கும் 5 நகரங்களைவிட சென்னை மாநகரின் செயல்பாடு அதிகத்திறன் கொண்டதாக விளங்குகிறது. மேலும், போக்குவரத்துத் துறையில் குறிப்பிடத்தக்க செயல்திறனுடன் முன்னிலை வகிக்கிறது.
  • மின்சார விநியோகம் மற்றும் வீட்டுவசதித்துறை ஆகிய அம்சங்களில் நிலவும் வேறுபாடுகளே தரவரிசை மதிப்பீட்டின் பின்னடைவுக்கான காரணங்களில் முதன்மை வகிக்கின்றன.

 

Pillar Analysis

 

  • சராசரி மதிப்பீட்டுத் தரவரிசையில் முன்னிலை வகிக்கும் 5 நகரங்களை ஒப்பிடும்போது வீட்டுவசதித் துறை மற்றும் மின்சார விநியோகம் ஆகிய அம்சங்களே தரவரிசையில் மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தக் காரணமாக உள்ளது என்பது தெளிவாகத் தெறிகிறது.
  • விழுக்காடுகள் அடிப்படையில் இடைவெளிக்கான காரணங்களாக வீட்டுவசதி மற்றும் அத்துறை தொடர்பான கூடுதல் அம்சங்கள் 87% மற்றும் மின் விநியோகம் 40% என்று கணக்கிடப்பட்டுள்ளது.
  • எனினும், தரிசுநிலப் பயன்பாடு, போக்குவரத்து போன்றவற்றில் சென்னை மாநகரம் முறையே 17% மற்றும் 15% என்ற தரவரிசையில் இடம் பெற்று முன்னிலை வகிக்கிறது.

 

Pillar Analysis