Skip to main content <%-- Protanopia filter --%> <%-- Deuteranopia filter --%> <%-- Tritanopia filter --%>

திறன்மிகு நீர் பயன்பாட்டு அளவு மீட்டர்

மக்களுக்கு/நுகர்வோருக்குத் தேவைப்படும் அளவு குடிநீரை நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் வழங்குவது பெருநகர சென்னை மாநகராட்சியின் தலையாய கடமைகளில் ஒன்றாகும்.

வழங்கப்படும் குடிநீருக்கான கட்டணவிகிதங்கள் வழங்கப்படும் நீரின் அளவிற்கேற்ப நிர்ணயிக்கப்படுகிறது.

வழங்கப்படும் குடிநீரின் அளவையும் நுகர்வோர் பயன்படுத்தும் நீரின் அளவையும் கணித்துப் பதிவு செய்வதற்கேற்ப ஒவ்வொரு குடிநீர் இணைப்பிலும் மீட்டர்கள் பொருத்தப்படும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீர் நமது வாழ்வாதாரம், அதைப் பொக்கிஷமாகப் பாதுகாப்போம்!

தேவைக்கேற்ற அளவு நீர் பெறுவதும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் நம் தலையாய கடமையும் பொறுப்பும் ஆகும். நீர் இணைப்புக் குழாய்களைப் பயன்படுத்தும் முறைகள், அவைகளில் நீர் கசியாமல் கவனமாகக் கண்காணித்து அவற்றைச் சீரமைத்தல் போன்ற செயல்பாடுகள் முக்கியமான நம் வாழ்வாதாரத் தேவைகளில் ஒன்றான குடிநீர் இருப்பைப் பாதுக்காக்க உதவும்.

குடிநீர் வழங்குதல் முறைகளில் வழங்கப்படும் குடிநீரின் அளவு மற்றும் பயன்படுத்தப்படும் குடிநீரின் அளவு போன்றவை துல்லியமாகக் கணக்கிடப்படுவதன் மூலம் அவற்றுக்கான நியாயமான கட்டண விகிதங்களை நிர்ணயித்து அதற்கான தொகையை நுகர்வோரிடமிருந்து பெறுவதற்கான வழிமுறைகளைக் கட்டமைக்க முடியும்.

தானியங்கி திறன்மிகு நீர் பயன்பாட்டு அளவு மீட்டர்கள் (AMR Meters)

நுகர்வோருக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவு மற்றும் அவரவர் பயன்பாட்டின் அளவைப் பதிவு செய்ய ஏதுவாக தானியங்கி திறன்மிகு நீர் பயன்பாட்டு அளவு மீட்டர்கள் அனைத்துக் குடிநீர் இணைப்புகளிலும் பொருத்தப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டப்பணியின் முக்கிய அம்சங்கள் :-

தானியங்கி திறன்மிகு நீர் பயன்பாட்டு அளவு மீட்டர்கள் நுகர்வோருக்கு வழங்கப்படும் நீரின் அளவைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தும்.

நீர் பயன்பாட்டு அளவின் அடிப்படையில் இந்த மீட்டர்களில் பதிவாகும் அளவிற்கேற்ப நுகர்வோருக்குக் கட்டணச் சீட்டுகள் வழங்கப்படும்.

நீர் பயன்பாட்டு அளவு பதிவு செய்யப்பட்டு அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படுவதால் நீர் வீணடிக்கப்படுவது கணிசமாகக் குறையும்.

நுகர்வோர் ஒவ்வொருவரும் அவரவர் நீர் பயன்பாட்டு அளவிற்கேற்ப கட்டணம் செலுத்துவது அவசியமாகும்.

இந்த கட்டண முறையால் பெருநகர சென்னை மாநகரக் குடிநீர் வழங்கு வாரியத்தின் வருவாய் கூடும்.

இந்தத் திட்டப்பணியின் முதல் கட்டமாக 12,708 குடியிருப்புகளில் தானியங்கி திறன்மிகு நீர் பயன்பாட்டு அளவு மீட்டர்களைப் பொருத்தும் நடவடிக்கையை சென்னை பெருநகர குடிநீர் வழங்குதல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் (CMWSSB) மேற்கொண்டுள்ளது.

தானியங்கி திறன்மிகு நீர் பயன்பாட்டு அளவு மீட்டர்கள் பொருத்தப்படுவதனால் ஏற்படும் பயன்கள் :-

சரியான அளவு நீர் வழங்குதல்

சரியான அளவு நீர் வழங்குதல்

தானியங்கி திறன்மிகு நீர் பயன்பாட்டு அளவு மீட்டர்கள் குடியிருப்புகளுக்கு வழங்கப்படவேண்டிய நீரின் அளவை முன்கூட்டியே அறிந்துகொள்ள உதவுகின்றன.

நீர் விரயம் தவிர்க்கப்படுகிறது

நீர் விரயம் தவிர்க்கப்படுகிறது

நீரின் ஒவ்வொரு துளியும் கணக்கிடப்படுவதால், விரயம் ஏற்பட வாய்ப்பில்லை

பயன்பாட்டு அளவிற்கேற்ற கட்டணம்

பயன்பாட்டு அளவிற்கேற்ற கட்டணம்

நுகர்வோர் அவரவர் பயன்படுத்தும் நீரின் அளவிற்கேற்ப கட்டணம் செலுத்தினால் போதும்

நீர் வழங்கும் அளவு கண்காணிக்கப்படுகிறது

நீர் வழங்கும் அளவு கண்காணிக்கப்படுகிறது

ஒவ்வொரு நீர் இணைப்புக்கும் வழங்கப்படும் நீரின் அளவு துல்லியமாகக் கண்காணிக்கப்பட்டுப் பதிவு செய்யப்படுகிறது

நிகழ்வு ஆய்வு

KOREA

SWMI: new paradigm of water resources management for SDGs

SINGAPORE

Managing the water distribution network with a Smart Water Grid